தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வரும் p2p பேரியக்கத்தின் இயக்குநருமான வேலன் சுவாமிகள் , தென் கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார், வண பிதா இரவிசந்திரன், அருட்சகோதரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேசுவரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேம சந்திரன், அகில இலங்கை சைவ மகாசபை பொது செயலர் மருத்துவர் நந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணி பிரமுகர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் இயக்குநருமான முருகவேல் சதாசிவம், மருத்துவர்கள், சமய பிரதிநிதிகள் சைவ சமய குருமார்கள், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.