
அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து ‘செனஹசே யாத்திரை’ (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டையே ஆட்டிப்படைக்கும் வகையில் பல உண்மைகள் வெளியாகும் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் இதன்போது வெளியாகும் என அவர் தெரிவித்திருந்தார்.நாம் 21ம் திகதி கொழும்பை ஆக்கிரமிப்போம் எனவும் எதிர்க்கட்சி எப்போதும் பலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.