
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதத்தில் இளைஞர் ஒருவருடன் ஓரினச் செயற்பாட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர் ஒருவரை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பேக்கரி உரிமையாளர் தனது பேக்கரி வேலைக்கா திருகோணமலை பிரதேசத்தில் இருந்து 20 இளைஞன் ஒருவரை அழைத்துவரப்பட்டு தனது விடுதியில் தங்கவைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு அந்தபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரின் நடத்தையை அவதானித்த நிலையில் 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்ததையடுத்து குறித்த விடுதியையை சுற்றிவழைத்து பொலிசார் போக்கரி உரிமையாளரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததுடன் இளைஞiனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை சனிக்கழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.