
அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளை (17) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் கல்வி அமைச்சு இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதங்களை வழங்காது என தெரிவிக்கப்படுகின்றது.