
இன்றையதினம் ரயிலில் மோதி 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சுன்னாகம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இதில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




