
வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் தந்தை செல்வாவின் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
வடாமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ். பண்ணாகம் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்றத்தின் தலைவர் எஸ்.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற முன்னைநாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்துகொண்டார்.




பண்ணாகத்திலுள்ள அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது அதிபர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு தெரிவுசெய்யப்பட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.