
நெல்லியடி பொலிஸாரால் இறைச்சிக்காக வெட்டுவதற்க்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று பிற்பகல் 4:00மணியளவில் குறித்த மூன்று ஆடுகளும் துன்னாலை குடவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பொலீஸ் சார்ஜன் M.S.H.P ஜெயரத்தின, தலமையிலான பொலீஸ் காஸ்டபிள்களான கு.வினோத், சாருஜன், தில்லின உட்பட்ட பொலீஸ் அதிகாரிகள் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதே வேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் நெல்லியடி பொலீசாருக்கு கிடைக்கவில்லை என்று உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலீஸாரால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.




