
13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் மத்திக்கும் மாகாணத்துக்கும் உள்ள நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் இல்லத்தில நேற்று திங்கட்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சரின் செயலாளர் கே. விக்னேஸ்வரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





