
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 62 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கஞ்சாவை ஏற்றிச் சென்ற இந்திய படகு ஒன்றும் அதில் பயணம் செய்த 3 சந்தேகநபர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பலின் 23 பொட்டலங்களில் பொதி செய்யப்பட்ட 65 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்இ கஞ்சா மற்றும் இந்திய டவ் கப்பல் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.