
முல்லைத்தீவு – கோட்டபாய கடற்படைமுகாமில் பணியாற்றிய கடற்படை புலனாய்வாளர் ஒருவர் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 15 ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (17) பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டபோது குறித்த வீரர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.