மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் ஒருவரையும், அவருக்கு உதவிய வர்த்தகர் ஒருவரையும் தொடுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டு பெண் தொடுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில – தல்வில பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றை நடத்தி வந்த அதன் உரிமையாளரையும் அங்கு பணிபுரிந்த ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நடத்தும் மசாஜ் நிலையம் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டமையும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.