
புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் புஸ்ஸலாவ பொலிஸார், கம்பளை பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.