
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர்.
இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்து கார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிகுண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

