
வடக்கு கிழக்கு பெண்கள் அணி மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகிய ஒன்றிணைந்து பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி வடமாகாண ஆளுநருடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் தென் இலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் உள்ளிட்டோர் வருகை தந்து பேரணியாகச் சென்று மகஜரை கையளித்தனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் பிரகாரம் அதிகளவான மக்கள் காணிகளை இழந்து முகாம்களில் தங்கி இருக்கும் நிலையில் அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து அவர்களின் சொந்த நிலத்தில் குடியமர அனுமதிக்குமாறு ஆளுநரிடமாக கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ஆளுநர் இல்லாத நிலையில் ஆளுநரின் பிரத்யோக செயலாளர்கள் ஒருவரிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
