கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிமீற்றர் நீர் அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களை கோரியுள்ளது.
இதன்மூலம் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
மதிய நேரங்களில் தாகம் எடுப்பதற்கு முன்னதாக நீரை அருந்த வேண்டும்.
அத்துடன் அதிகளவான நீரை பருக வேண்டும்.
இதுதவிர, நீர்ச்சத்து குறைப்பாடு ஏற்படுமாயின் அதனை இலகுவாக இனங் காணமுடியும்.
வெளியேறும் சிறுநீரகத்தின் நிறம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அதேநேரம், பொது வெளியில் பணிபுரிபவர்கள் தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு அங்கிகளை அணிவது சிறந்த விடயம் என விஷேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ அறிவுறுத்தியுள்ளார்.