
கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் (19.04.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெற்காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக வயல்வெளியில் பெண் மற்றும் ஆண் ஒருவர் தாக்கப்பட்டதில் ஆண் உயிரிழந்துள்ளதுடன், பெண் படுகாயமடைந்துள்ளார்.
மண்வெட்டியால் தாக்கிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளதுடன், 65 வயதுடைய மனைவி காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை படுகாயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.