நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் மக்களின் தற்சார்பு பொருளாரத்தை ஊக்கிவிக்கும் முகமாக பயன் தரும் தாவரங்கள் வழங்கும் திட்டம் நேறறு கொடிகாமம் பகுதியில் இடம் பெறறது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசபை உறுப்பினரும், கொடிகாமம் வடக்கு கிரமா அபிவிருத்தி சங்க செயலாளரும், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய கண்காணிப்பாளருமான கௌரவ கலாநிதி வை.ஜெகதாஸ் ஒழுங்கமைப்பில் முதல் கட்டமாக கொடிகாமம் வடக்கு J/326
கிராம அலுவலர் கிராம அலுவலர் K.பரமானந்தம் தலைமையில் கொடிகாமம் வடக்கு கிராம அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.சுதகர், மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி வே.இரசமணி ஆகியோர் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு
400 மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதே வேளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தாவரங்களை சரியான முறையில் பராமரித்து பயன் பெறும் பட்சத்தில் மேலும் தாவரங்கள் வழங்கப்படும் என்று ஒழுங்கமைப்பாளரான கௌரவ கலாநிதி வை.ஜெகதாஸ்
தெரிவித்திருந்தார் .