ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது சில விமானங்கள் நிதி சிக்கல்கள் காரணமாக இயக்கமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், ஏ320 என்இஓ குடும்பத்தைச் சேர்ந்த 5 விமானங்கள் தற்போது புதிய இயந்திரங்களை பொருத்துவதற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
உலகளாவிய தொழில்துறையில் இயந்திரங்கள் பற்றாக்குறை மற்றும் இந்த வகை விமானங்களுக்கான இயந்திர பழுதுபார்ப்புகளுக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதே இதற்கான காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அதன் விநியோகஸ்தர்களுடன் இணைந்து தீர்வொன்றை உருவாக்கி வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய இயந்திர விநியோகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஸ்ரீல ங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
உலகளாவிய பற்றாக்குறை காரணமாகவே விமானங்கள் தரையிறங்கியுள்ளதாகவும், நிதி பற்றாக்குறையால் அல்ல என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.