வடக்கில் பனை வளம் அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலைத் திட்டம்! தென்னை பயிற்செய்கை சபை

வடக்கு மாகாணத்தில் பனை வளம்  அழிக்கப்படுவதை தடுக்க விசேட வேலை திட்டம் ஒன்று பனை  அபிவிருத்திசபையும் தென்னை பயிற்செய்கைசபையும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக

தென்னை பயிற்செய்கைசபையின் யாழ் பிராந்திய முகாமையாளர் தே,வைகுந்தன் தெரிவித்தார்.

இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்வட மாகாணத்தில் தென்னை செய்கையும்  பனை செய்கையும் கூடுதலான அளவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

ஆனால் பனை என்ற வளம் மிக முக்கியமானது வடக்கு மாகாணத்தின் வளங்களாக இரண்டு கண்கள் காணப்படுகின்றன ஒன்று தென்னை மற்றையது பனை

ஆனால் பனை வளம் படிப்படியாக ஓரளவுக்கு குறைந்து கொண்டு செல்கின்றது தென்னைசெய்கைவீதம் கூடுதலாக இருக்கின்றது

பனையினை வெட்டி தென்னைசெய்கையினை கூடுதலாக செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது

எமது பரிந்துரைக்கிணங்க தென்னை  பனை செய்கையினை ஒன்றாக இணைத்து செய்வதற்குரிய ஆராய்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது

அதாவது ஒரு புதிய வேலை திட்டம் ஒன்றினை நாங்கள் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை  முன்னெடுக்கவுள்ளோம்.

அதற்கான முன்னாயத்த வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன குறிப்பாக தென்னை செய்கையை மேற்கொள்ளாது பனை மரம் அழிப்பதை நிறுத்துவதும் பனை தென்னையை ஒன்றாக இணைத்து வளர்ப்பதை ஊக்குவிப்பதே அதன் நோக்கமாகும்

இதற்கான திட்டம் விரைவில் பனை அபிவிருத்தி சபையும்  தென்னை பயிற்செய்கை  சபையும் இணைந்து   கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது மேற்கொள்ளப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews