இந்த நாட்டிலே தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்காக 40 வருடத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது தான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எனவே இனங்களை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் எந்த சட்டமாக இருந்தாலும் அதனை முற்று முழுதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என தமிழரசு கட்சிஅ ம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நாவிதன்வெளியில் அமைந்துள்ள நா.உறுப்பினரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்களை இல்லாதொழிப்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எங்களுடைய இனமே முற்று முழுதாக அழிக்கப்பட்ட சட்டம் இந்த சட்டத்தினால் நாட்டிலே இலச்சக்காக்கான மக்கள் வாழமுடியாமல் ஜரோப்ப நாடுகள் மற்றும் இந்தியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இதற்கு எல்லாம் அடித்தளமாக இருந்தது இந்த பயங்கரவாத தடைச்சட்டம்
எனவே இந்த 40 வருட யுத்தத்திலே பல இலட்சக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தவர்கள் நாங்கள் அந்த வலியை உணர்ந்தவர்களும் நாங்கள் அதன் அடிப்படையில் நீதி அமைச்சரால் எதிர்வரும் 25 ம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள உத்;தேச திருத்த சட்டத்தில் பல பாதிப்புக்கள் இருக்கின்றது எனவே இந்த சட்டத்தை எதிர்ப்போம்
ஏன் என்றால் இந்த தடைச்சட்டத்தால் தமிழராகிய நாங்கள் எங்களுடைய உடமைகள் உறவுகள் என்ற அடிப்படையில் சொல்லமுடியாதளவு பாதிக்கப்பட்டவர்;கள்; என்றதனால் இதனை எதிர்ப்போம்
ஒரு இனத்தை இன்று சர்வசாதாரனமாக நடாத்தப்பட்ட 69 இலட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதியை விரட்டுவதற்காக முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை அடக்கியபோது தான் சிங்கள மக்களுக்கு ஞானம் பிறந்துள்ளது அவர்களுடன் ஏனைய சகோதர இனங்கள் செயற்பட்டிருந்தாலும் இந்த நாட்டிலே வாழும் பெரும்பான்மை சமூகத்துக்கு இப்போது தான் இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் இருக்கின்ற பாதிப்புக்கள் தெரியவருகின்றது எனவே இனங்களை அழிக்கும் எந்த சட்டம் வந்தாலும் நாங்கள் அதனை எதிர்ப்போம். என்றார்.