
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஒத்தது என விமர்சித்தார்.