இலங்கைத் தீவில் வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நிகழ்வதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அத்தகைய வல்லரசுகளுக்கிடையே இலங்கை மண்ணில் போட்டிகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியா,அமெரிக்கா, மற்றும் சீனாவுக்கிடையேயான ஆதிக்கப் போட்டி தவிர்க்க முடியாததென்றாக எழுச்சி பெற்றுவருகிறது. அத்தகைய அரசுகள் தமது எல்லைக்குள் செயல்பட்டாலும் ஊடகங்களும் கருத்தியலாளர்களும் அரசுகளின் ஆலோசகர்களும் அதனை அதீதமாக்குவதில் முனைப்புக் காட்டி அரசுகளை போட்டிக்குள் தள்ளுகின்ற நிலை உள்ளது. இலங்கைத்தீவு பூகோள அரசியலும் புவிசார் அரசியலும் பங்கெடுக்கும் அமைவிடத்தில் அமைந்துள்ளது. வல்லரசுகளின் போட்டித் தன்மைக்குள் இந்துசமுத்திரத்தின் மத்தியில் இலங்கைத் தீவு அமைந்துள்ளமையும் இன்னோர் காரணமாக கொள்ள முடியும். இதில் தென் இலங்கை ஆட்சியாளர்கள் இத்தகைய போட்டி அரசியலை சரிவரப்பயன்படுத்துவதும் வல்லரசுகள் தமது பிராந்திய பூகோள நலன்களை அனுபவிப்பதும் இயல்பான அரசியலாக நகர்கிறது. ஆனால் ஈழத்தமிழர் மட்டுமே வல்லரசுகளாலும், தென் இலங்கையாலும் பயன்படுத்தப்படும் இனமாக காணப்படுகின்றனர். அந்த அரசுகளின் நலன்களை நிறைவு செய்வதற்கு உதவும் மக்கள் கூட்டமாகவே ஈழத்ததமிழர் காணப்படுகின்றனர். இக்கட்டுரையும் இலங்கைத் தீவை நோக்கிய வல்லரசுகளின் பிந்திய நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.
சீனா இலங்கைத் தீவில் ராடர் தளம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடுவதாக Economic Times செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் விண்வெளி தகவல் ஆய்வு மையத்தை ஆதாரமாகக் கொண்டு தகவலை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவின் விஞ்ஞான ஆய்வகம் இத்தகைய திட்டத்தை னுழனெசய டீயல வனப்பகுதியில் அமைக்கவும் அது கொழும்பிலிருந்து தென் கிழக்காக 155 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாகவும் அச் செய்தியில் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியான னுழனெசய டீயல தனித்துவம் மிக்க வரலாற்று இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக Dondra Bay ஒரு வரலாற்று நகரமென்றும் மனித பரம்பல் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்துள்ளதாகவும் போத்துக்கேயர் இலங்கையை கைப்பற்றிய காலத்தில் இலங்கை மன்னர்களின் போர் உத்திக்கான(1587) மையமாகவும் விளங்கியதாக தெரியவருகிறது. அது மட்டுமல்லாது 16 ஆம் நூற்றாண்டில் மிகப்பிரதான நகரமாகவும், வர்த்தக நகரமாக விளங்கியுள்ளது. தற்போது சிறிய நகரமாக காட்சியளிக்கிறது.
தற்போது வெளியான தகவல்களின் அடிப்படையில் Dondra Bay முதன்மைப்படுத்தப்பட்டாலும் 2014 இல் இப்பகுதியில் ராடர் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் சீன ஜனாதிபதியின் வருகையின் போது நாட்டப்பட்டதாகவும் அதனை அண்டிய கடல்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பதற்கும் நடமாடுவதற்குமான கட்டுமானங்கள் நிகழ்த்தப்பட திட்டமிட்டதாகவும் தெரியவருகிறது. இக்காலப்பகுதியில் இந்தியா இலங்கையுடன் அதிக முரண்பட்டதுடன் இதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட றுகுணுப் பல்கலைக்கழகத்துடன் இந்தியா தொடர்புகளை மேற்கொண்டதாகவும் செய்திகள் காணப்படகின்றன. 2018இல் அப்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்தியாவுக்கு சில உத்தரவாதங்களை வெளிப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. ஆனால் தற்போதுள்ள புதிய தகவல் தனித்துவமானது. அது பற்றிய அறிக்கையினை இந்திய கடற்படையின் அறிக்கை மூலம் வெளியாகியுள்ளதாகவும் அதுவே பாரிய நெருக்கடியைத் தந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதாவது Dondra Bay அண்டிய கடற்பகுதியில் 45 ஏக்கர் நிலப்பரப்பினை 99 வருடத்திற்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க இலங்கை தயாராவதாக அவ்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வகை ராடரை சீனா பொருத்துவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பிராந்திய சர்வதேச வல்லரசுகளுக்கானதாகவே அளவிடப்படகிறது. குறிப்பாக இந்தியா இலங்கைக்கு அண்மையில் அமைத்துள்ள பாதுகாப்பு மையங்களை சினா கண்காணிக்க முடியுமென ஆய்வாளர்கள் வெளிப்படத்துகின்றனர். அதாவது இந்திய இந்தமான் நிக்கேபார் தீவகளில் அமைத்துவரும் கடற்படைக்கான துறைமுகப் பகுதியில் நிறுத்தப்படும் அனைத்து கப்பல்கள் நீர்மூழ்கிகள் அதில் பொருத்தப்பட்டுள்ள ஆயதங்கள் போன்ற தகவல்கள் சீனா தெரிந்து கொள்ளும். அது மட்டுமல்லாது கூட்டங்குழம் அனல் மின் நிலையம் உட்பட தென் இந்தியாவில் அமைந்துள்ள தொழில்நுட்ப மையங்கள் சீனாவில் இலகுவாக இலக்குவைக்கப்படவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடியுமென குறிப்பிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன் குவாட் மற்றும் அக்குஸ் (QUAD, AUKUS)அமைப்புக்களின் நடமாட்டத்தையும் நகர்வுகளையும் துல்லியமாக அளவிட முடியுமென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் இந்தோ-பசுபிக் பாதுகாப்புக்கான தந்திரோபாயத்தையும் சீனாவின் இலங்கையில் அமையவுள்ள ராடர் நிலையம் பாதிப்பினை ஏற்படுத்துமென தெரியவருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் இந்துசமுத்திரத்தில் இயங்கிவரும் பிரதான கடற்படைத் தளமான டியாகோகார்சியாத் தளம் னுழனெசய டீயல இருந்து 1700 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளதாகவும் அதனால் அத்தளத்தின் நடமாட்டம் மற்றும் இராணுவ கொள்ளளவுத் திறன் சீனாவால் அளவிட முடியுமெனவும் தெரியவருகிறது.
ஆனால் வல்லரசுகளது போட்டியில் இதுவொன்றும் புதிய விடமாக தெரியவில்லை. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங் இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தோ-பசுபிக் பாதுகாப்புக் குழுவினரது வருகை பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தின் சீர்திருத்தங்கள், கடல்சார் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அக்குழு வருகை தந்ததாக மேலும் தெரிவித்து ள்ளார். உயர் இராணுவக் குழுவினரது விஜயங்கள் இவ்வாறுதான் இராஜதந்திர வார்த்ரைதயில் குறிப்பிடப்படுவதுண்டு. அது இராஜதந்திரிகளின் இராஜதந்திரச் செயல் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
சீனாவின் ராடர் Dondra Bay-இல் அமைக்கப்படுவதால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மற்றும் மேற்கு நாடுகளுக்கும் வல்லரசுப் போட்டியில் ஒரு பின்னடைவாகவே கணிப்பிடப்படுகிறது. அதனால் இலங்கைத் தீவில் நிலவும் ஆட்சிகள் மீதும் குறிப்பாக முன்னாள் ஆட்சியாளர் மீது அதிக அதிருப்தியுடனே இந்த நாடுகள் காணப்படுகின்றன. மீளவும் அத்தகைய ஆட்சியாளர்கள் எழுச்சியடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இந்த நாடுகள் செயல்படுகின்றன. ஆனால் சீனாவோ இலங்கைத் தீவில் தமது செல்வாக்கை வைத்துக் கொண்டு இந்துசமுத்திரத்தையும் அதன் மூலமான பூகோள அரசியலையும் கையாள முனைகிறதாகவே தெரிகிறது. தென் இலங்கையின் ஆட்சி மேற்கின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சூழலை உறுதிப்படுத்திக் கொள்வதே தற்போது அந்த நாடுகளது நிலைப்பாடாகும். இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவின் விடயத்தில் தீவிரமான நகர்வுகளை செய்ய தயாரில்லாத போக்கு நிலவுகிறது. மேற்குலகமும் சீனாவையும் இந்தியாவையும் மோதவிடுவது தேவையான அரசியலாக உள்ளது. இந்தியாவோ அத்தகைய மோதலைத் தவிர்த்து இரு நாட்டுக்குமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பக்களை அதிகப்படுத்த முனைகிறது.
ஏறக்குறைய 18 நாடுகள் இந்தியாவுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளன. சீனா, இந்தியா, ரஷ்சிய கூட்டை உடைக்க முயலும் மேற்கு தற்போது தமக்குள் முரண்படத் தொடங்கியுள்ளது. அண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன விஜயமும் அதனை அடுத்து நெதலாந்தில் அவர் ஆற்றிய உரையும் அத்தகைய முரண்பாட்டை கோடிட்டுக் காட்டியுள்ளது. ஐரோப்பாவின் இறைமை பற்றிய இமானுவல் மர்கோனின் உரை அதிக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதுவே ஐரோப்பாவின் யதார்தமுமாகும்.
சீனாவின் ராடர் விவகாரம் ஈழத்தமிழருக்கு எத்தகைய விளைவு ஏற்படும் என்பது பிரதான கேளிவியாகும். குறிப்பாக சீன-தென் இலங்கை நெருக்கம் பலமானதென்பது புரிந்து கொள்ளக்கூடியதாகும். அதே நேரம் சீனாவின் அரசியல் கொள்கை ஈழத்தமிழருக்கு சார்பானதெனக் கூறிவிட முடியாது. அதற்காக இந்திய, அமெரிக்கா, மேற்கு நாடுகள் ஈழத்தமிழரது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்படுகின்றன என்று வாதிக்க முடியாது. அரசியல் ரீதியில் அனைத்து அரசுகளும் தமது நலன்சார்ந்து செயல்படுகின்றனவே அன்றி ஈழத்தமிழரது நலனுக்கானவை கிடையாது. சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து என ஈழத்தமிழர் குறிப்பிடுவதன் மூலம் இந்தியாவின் ஈழத்தமிழர் சார்ந்த கொள்கையில் மாற்றம் செய்துவிட முடியாது. அது இந்தியாவின் நிலைப்பாடே அன்றி ஈழத்தமிழரது நிலைப்பாடல்ல.
மாறாக ஈழத்தமிழரை முதன்மைப்படுத்திக் கொண்டு அத்தகைய ஆபத்தை தடுக்க முடியும் என்பதை இந்திய கொள்கைவகுப்பாளர்களும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்ளவில்லை என்பதே கவனத்தில்’ கொள்ள வேண்டிய விடயமாகும். இலங்கைத்தீவு முழுமையாக சீனாவின் கைகளுக்குள் அகப்படுமாயின் இந்தியாவின் பிராந்திய பலம் காணாமல் போகும் என்பது இந்தியாவுக்கு தெரியாததொன்று கிடையாது. 1962 இல் இருந்து அருணாசலப் பிரதேசத்தில் பாரிய நிலப்பரப்பை இழந்துள்ள இந்தியா இன்றுவரை அதனை மீட்க முடியாதுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. அதாவது சீனாவை எதிர்த்துக் கொண்டு இந்தியா ஈழத்தமிழருக்காக செயல்படுமா என்பது ஈழத்தமிழர் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். இலங்கைத் தீவு முழுமையாக சீனாவின் பிடிக்குள் போவதென்பது அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளுக்கும் ஆபத்தானதே. இந்தியாவின் பலம் இலங்கைத்தீவில் இழக்கப்படுமாயின் மேற்குலகத்தின் வாய்ப்பும் காணாமல் போகும். ஆனால் மேற்கு இலங்கைத்தீவை இழப்பதால் தமது இருப்பையோ நிலத்தையோ அதிகாரத்தையோ இழக்கப் போவதில்லை. இந்தியாவுக்கு அவை அனைத்தும் நிதர்சனமாகும். இந்தியாவின் புவிசார் அரசியல் அதற்கான அடிப்படையாகும். எனவே ஈழத்தமிழரை நோக்கி இந்தியாவும் மேற்குலகமும் நகர வேண்டுமே அன்றி ஈழத்தமிழர் இந்தியாவிடமோ மேற்கிடமோ கெஞ்சவேண்டிய நிலை இல்லை என்றே தெரிகிறது. சீன ராடரின் அரசியல் ஈழத்தமிழருக்கு அத்தகைய வாய்ப்பினையே தந்துள்ளது. அவ்வாறு இந்தியாவும் மேற்கும் செயல்படாது விட்டால் ஈழத்தழிழருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மேற்குக்கும் ஆபத்துள்ளதென்பது தெளிவாக தெரிகிறது. இந்து சமுத்திரம் இழக்கப்படுவது மட்டுமல்ல உலக வல்லரசாக மாறும் நிலையை சீனா அடையும். அதில் தேசிய இனங்களுக்கு எத்தகைய பாதுகாப்பும் இருக்க வாய்ப்பில்லை. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருளாதாரப் பண்டமாக மாறும்.
எனவே வல்லரசுகள் தமது நலன்களுக்குட்படுத்தியே இலங்கைத் தீவின் அரசியலை கையாளுகின்றனர். சீனா எதிர் இந்தியா என்ற போக்கு மாறி மேற்குலகமாக அடையாளப்படுத்தப்படும் நிலை உருவாகி வருகிறது. இது இந்திய நலனுக்கானதே. அத்தகைய நலன் வளர்ச்சி அடையும் நிலையை ஈழத்தமிழர் அரசியல் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கைகள் கோட்பாடுகள் கொத்தளங்களை விட நலன்களே அரசியலில் மேலானது.