
நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன.
ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது. நாம் ஹர்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்’ என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத் தலைவர் ந.சற்குணராஜா ஆகியோர் தெரிவித்தனர்.