
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக வழங்கப்படும் உதவித்தொகை போதாது எனக் கூறி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகியிருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஆசிரியர்கள் கோரிய உதவித்தொகையை வழங்க கல்வி அமைச்சு சம்மதம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்ல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.