
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆவரங்கால் மேற்கு, வன்னியசிங்கம் பகுதியில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது இன்றைய தினம், செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.