
அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் , சைவக் கோவில்கள் அழிப்பு , தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் கோரி இன்று யாழ் வர்த்தகர்கள், மற்றும் தனியார் தொழில் நிலையஊழியர்கள் பூரண ஹர்த்தலை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியது.
தனியார் போக்குவரத்து துறையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை யால் தனியார் பேருந்து சேவைகளும் தடைப்பட்டன.
அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தேசிய பாடசாலைகளும் மூடப்பட்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது.