
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? நீக்குவதா? என்பது தொடர்பாக இன்று நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளது.
குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ளார். இதன்படி தேசிய கொவிட் தடுப்பு செயலணி 13ம் திகதி ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பாக இன்று கூடி ஆராயவுள்ளது.
இதனடிப்படையில் ஊரடங்கு சட்டத்தை நீக்கும் தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.