
ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல்நேற்று [25] பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் நடைபெற்றது.



ஊடகவியலாளர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது ரூபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.



இந்த நினைவேந்தலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



ஊடகவியலாளர் ரூபன் யுத்த காலத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் நின்று சிறந்த ஊடகப்பணி ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.