
புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீனின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவன செய்யுமாறும் கேட்டு நாம் கடந்த 27-03-2023ல் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கமைய தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்..
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.