
இந்த நாட்டிலே தமிழர் பகுதிகளை கபளீகரம் செய்து, தமிழர்களை இலங்கையிலே இல்லாமல் செய்வதில் இந்த நாடு மிக முக்கியமான பாத்திரத்தை கொண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்திற்கு உடந்தையாக இருக்கப்போகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகவே இருக்கும் நிலையிலும், எங்களது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழ் தேசிய இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலிலும், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளது என்பதைதான் நாம் பார்க்கின்றோம்.
சர்வதேச நாணய நிதிய கடன் இதற்கமைய சர்வதேச நாணய நிதிய நிபந்தனை மூலம் இந்த நாட்டில் இருக்கும் இனப்பிரச்சினை அல்லது அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களால் என்ன செய்ய முடிந்தது?மீண்டும் ஒரு யுத்தத்திற்கு ஐ.எம். எப் நிதி வழங்குகின்றதா? இந்த நாட்டிலே ஒரு இனம் அழிக்கப்பட்டு வருகின்றது.
அந்த இனத்தின் வாழ்க்கை தொலைக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் ஊடாக இலங்கை தன்னை கட்டியெழுப்பிக்கொண்டு மீண்டும் ஒரு இனத்தை அழிக்க முற்படும் என்பதை குறிப்பிடுகின்றோம்.
இவ்வாறு நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையினுடைய பொருளாதரத்தில் ஒரு பெரிய யுத்தத்தை கடன் வாங்கித்தான் நடத்தியது. என தெரிவித்துள்ளார்.