
கிளிநொச்சியில் அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண காணி மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் மற்றும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.