அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.
எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக குரல் கொடுக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிவரும் 29ஆம் திகதி கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் சிவில் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு வலுச் சேர்க்குமாறும் கிளிநொச்சி ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.