காத்தான்குடியில் பாடசாலைக்கு முன்னால் கஞ்சா வியாபரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர் கைது!

காத்தான்குடி நகரிலுள்ள பிரபல பெண் பாடசாலைக்கு முன்னால் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று வியாழக்கிழமை (27) காலை கைது செய்துளடளதாக  காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாமுதீன் சம்பவதினமான இன்று காலை கைது செய்யப்பட்ட வியாபாரியின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்று  கஞ்சா வேணும் என கேட்டுள்ளார்.

இதனையடுத்து கஞ்சாவியாபாரி குறித்த பாடசாலைக்கு முன்னால் வருமாறு கூறியதையடுத்து மாறுவேடம் பூண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்டு கேரள கஞ்சாவை வாங்கும் போது கையும் மெய்யுமாக குறித்த நபரை சிறிய பக்கட் கொண்ட கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர்.

அதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews