
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் மீது 29.04.2023 கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது. தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.