
மருதங்கேணி மாசார் எல்லையில் மருதங்கேணி முடங்கு பாலத்திற்க்கு அண்மையில் கடந்த சிவராத்திரியன்று வந்து குடியேறிய மரிதோன்றீச்சரர் ஆலயத்தின் மருதோன்றி ஈச்சரர் மகிமை மீட்டும், சுவாலை எனும் எரியும் சொல்லில் ஒரு சிவயாகம் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு 30.04.2023 பிற்பகல் 4:00 மணியளவில் ஆலய முன்றலில் ஆலய அறங்காவலர் சபை தலைவர் வே.சிவராசா தலமையில் ஆரம்பமானது.












வரவேற்புரையினை கலைஞர் வி.ஜே.நிதர்சன் நிகழ்த்தியதை தொடர்ந்து தலமை உரையினை நிகழ்வின் தலைவரும் ஆலய அறங்காவலர் சபை தளைவருமான வே.சிவராசா நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து வாழ்த்துரைகளை நிகழ்வின் விருந்தினர்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து
நிகழ்வின் விருந்தினர்கள் ஆலய நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் இணைந்து இறு வெட்டினை வெளியீட்டு வைத்ததுடன் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.




அதனை தொடர்ந்து கலைஞர்களான ஈழத்தின் இளைஞ கவி P S விமல், பாடலாசிரியர் புரட்சி கவி யாழ் மருதன், இசை எழுவரதி எம் பகி பாடகர் என் தயாபரன் ஆகிய கலை கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்சி தொகுத்து வழங்கியவர்களான அறிவிப்பாளர் திருமாறன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.












