
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.