
வரலாற்று சிறப்பு மிக்க பருத்தித்துறை கொன்றை மர நிழல் நாயகி கோட்டுவாசல் சிறி சண்டிகா பரமேஸ்வரி ஆலய சுபகிருது வருட மகோற்சவத்தின் ஏழாம் திருவிழாவான திருமுழுக்கு திருவிழா இன்று அதிகாலை 4:00 மணியளவில் உஸக்கால பூசையுடன் ஆரம்பமாகி, தம்ப பூசை வசந்த மண்டப பூசை என்பன இடம் பெற்று சிறி சண்டிகா பரமேஸ்வரி உள்வீதி மற்றும் இரண்டாம் வீதி என்பன வலம்வந்தது.
இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் பிரம்மசிறி தானு மகாதேவக் குருக்களின் நல்லாசியுடன் மகோற்சவ குரு ஸ்வர்க்கியசிறி பிரம்ம சிறி தானு வாசுதேவ சிவாச்சாரியார், கோட்டுவாசல் அம்மன் ஆலய பரதம குரு ஜெயவர்ஸதாங்க குருக்கள் , ஆலய நித்தியகுரு சிவசிறி உலகாந்த புஸதபராசா குருக்கள் ஆகியோர் இணைந்து இன்றைய திருவிழா கிரிஜைகளை மிக மிக சிறப்பாக நடாத்தினர்.
இதில் கோட்டுவாசல் வாசல் கொண்டல் நாயகி அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நாளை வேட்டைத் திருவிழாவும் ,நாளை மறுதினம் தேரில் எழுந்தருளி தீர்த்த உற்சவமும் இடம் பெறவுள்ளது.








