இந்த வருடம் இதுவரை 1132 டெங்கு நோயாளிகள் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தொற்று நோய்களான டெங்கு மற்றும் மலேரியா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
யாழ் மாவட்டத்தில் இருவரை டெங்கு நோயினால் 1132 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண் மரணித்திருப்பதாகவும் அவர் யாழ் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டவர் அல்ல என்றும், படைத்துறையில் பணியாற்றியவர் என்றும், குறிப்பிட்ட மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் டெங்கு நோய் வருமுன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் கொடுத்துள்ள அதே வேளை, மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.