
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையும் வேலணை ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து, வேலணை பகுதியில் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அந்தவகையில் இன்றயய தினம் 100 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், வேலணை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா பெட்டிகள், வாழ்வாதார நிதி உதவி மற்றும் 100 மாணவர்களுக்கு தென்னம் பிள்ளைகள் என்பன வழங்கப்பட்டன.
சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் திரு. ஜனார்த்தனன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வேலணை மத்திய கல்லூரியின் அதிபர் திரு. கிருபாகரன், வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகன்தாஸ், முன்னை நாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.வேதநாயகம், வேலணை வைத்தியசாலை வைத்தியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


