காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாற்குடாவில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஆண் ஒருவர் உட்பட இருவரையும் மற்றும் காத்தான்குடியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடன் ஒருவர் உட்பட வெவ்வேறு சம்பவங்களில் இன்று வியாழக்கிழமை (04) 3 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதிமான இன்று நாவற்குடாவி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அரச மதுபான வியாபாரத்தில் இடுபட்வரின் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 3 ஆயிரத்து 600 மில்லிலீற்றர் அரச மதுபானமும் 9 ஆயிரம் மில்லி லீற்றர் பியரையும் மீட்டனர்.
அதேவேளை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றகையிட்டபோது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஆண் ஒருவரை 750 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை வீதி ஒன்றில் வைத்து மடக்கி பிடித்ததுடன் ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தை மீட்டுள்ளனர்
இவ்வாறு வெவ்வேறு சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.