வடந்தை – 2023” நூலுக்கான ஆக்கங்கள் கோரல்…!

எமது திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான ஆக்கங்கள் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 26.05.2023 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கவும்.
விதிமுறைகள்
01. ஆக்கங்கள் அனைத்தும் வடக்கு மாகாணம் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
02. அரசியல் கலப்பற்றதாக இருத்தல் அவசியம்.
03. தனிப்பட்ட நபரை பாதிக்காது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
04. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
05. ஆக்கமானது அவரவர் சொந்த ஆக்கமாக இருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.
06. முன்னர் எந்த பத்திரிகைகளிலோ, சஞ்சிகைகளிலோ பிரசுரிக்கப்படாத ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.
07. கணனியியில் தட்டச்சு செய்யப்பட்ட (Font Size – 12) மென்பிரதிகளை (Soft Copy) கீழே தரப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் வன்பிரதியினை(Hard Copy) அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கவும்.
08. A4 தாளில் 4 பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
09. கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
10. முடிவுத்திகதிக்கு பின்னர் கிடைக்கும் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
தலைப்புக்கள்
01. உளரீதியான ஆற்றுப்படுத்தலில் கலைகளின் பங்கு
02. வடமாகாண கலைகள் சர்வதேசம் நோக்கி பயணிப்பதற்கான ஏது நிலைகள்
03. தமிழ்ப் பண்பாட்டில் மரபு வழிக் கல்வியின் வகிபாகம்
04. தமிழர் வாழ்வில் கூட்டுக் குடும்பத்தினதும் தனிக்குடும்பத்தினதும் வகிபாகம்
05. தமிழர் பாரம்பரியமும் உணவுப் பழக்க வழக்கங்களும்
06. பொருளாதார மேம்பாட்டில் கலைகளின் பங்கு
அனுப்ப வேண்டிய முகவரி:
பிரதிப் பணிப்பாளர்,
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
கல்வி அமைச்சு,
செம்மணி வீதி, நல்லூர்
தொலைபேசி இல: 0212054105
மின்னஞ்சல்: npc.culture@yahoo.com

Recommended For You

About the Author: Editor Elukainews