யாழ்ப்பாணம் வடமராட்சி செலவச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு நேற்று 05/5/2023 வழங்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும்,
வட்டுவினி ஒழுங்கை, இணுவில் மேற்கை சேர்ந்த தரம்-10 மாணவிக்கும்,
பொன்னாலை தெற்கு, பொன்னாலையை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவிக்கும்,
ஊரெழு மேற்கு, சுன்னாகத்தை சேர்ந்த உயர்தர மாணவனுக்கும்,
புத்தூர் கிழக்கு, புத்தூரை சேர்ந்த தரம்-09 மாணவனுக்கும்,
புன்னாலைக்கட்டுவன், சித்திவிநாயகர் பாடசாலையில் கல்வி கற்கின்ற தரம் – 10, தரம்-8 ஆகிய இரு மாணவர்களுக்குமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
இதே வேளை இந்தியா கோயம்புத்தூர் சைவசித்தாந்த பேராசிரியர் திரு.மீ.சிவசண்முகம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
இச் செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், இந்தியா கோயம்புத்தூர் சைவ சித்யாந்த பேராசிரியர் மீ சண்முகம் , ஆச்சிரம தொண்டர்கள், வழங்கிவைத்தததன்
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.