தையிட்டி தொடர்பில் போலியான கடிதங்கள் வெளியாகியுள்ளன – ஊடகப் பேச்சாளர் சுகாஷ்

தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள்.
அதை எழுதியவர்கள் வருங்காலங்களில் இவ்வாறான கடிதங்களை எழுதும்போது,
01. திகதிகளைக் கவனிக்க வேண்டும். 2019இல் கஜேந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.
02. 2019இல் வழங்கப்பட்ட கடிதத்தில் 5வது நபராக உள்ள சிவகுமார் என்பவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களைக் கொண்டிருக்கின்றது. அதை அப்பிடியே பார்த்து எழுதும்போது ஈயடிச்சான் கொப்பி போல 2021ம் ஆண்டு திகதியிட்ட கடிதத்திற்கும் 11 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
03. காணி உரிமையாளர்களின் கையொப்பங்கள் இரு கடிதங்களிலும் வித்தியாசமாக இருக்கின்றன.
04. 2021ம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதத்தில் 04வது, 05வது நபர்களின் கையெழுத்துகளில் Initialஇல் வித்தியாசம் வேண்டும். “A” ஐ பார்க்க ஒருவரே கையெழுத்து வைத்திருப்பது தெரிகிறது. ஆனால் 2019இல் கையெழுத்து வித்தியாசமாக இருக்கின்றது.
இவற்றைத் திருத்திவிட்டுக் கடிதத்தை வெளியிடவும்.
நன்றி!
க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Recommended For You

About the Author: Editor Elukainews