ஊடக துறை சுதந்திரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்து தெரிவிக்கும் சுந்திரத்தின் அடிப்படையில் மாத்திரம் தான் சாத்தியமாகும் என யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்ற விருதவழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விருது வழங்கின் நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஊடகத்துறை சார்ந்தவர்கள் இருக்கக்கூடிய இந்த அவையிலே சட்டத்துறை சார்ந்தவளாக நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்
ஊடகத்துறை சார்ந்த நிகழ்வுகழிலே கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்ற பொழுது அந்த வாயப்பை நான் மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அது எனது வளமை.
ஊடகம் குறித்தும் சட்டம் துறைக்கும் இடையேயான ஊடாட்டத்தையும், ஒரு துறையினுடைய வளர்ச்சிக்கு மற்றைய துறை ஆற்றக் கூடிய வகிபாகம் தொடர்பிலும் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்வதற்கான களங்களாக ஊடகத்துறை சார்ந்த சந்திப்புக்களை வாய்ப்பாக நான் பயன்படுத்த விரும்புகிறேன்.
அந்த வகையிலே இன்றைக்கு கிடைத்திருக்க கூடிய இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி ஊடக துறையும் சட்டத்துறையும், எந்த வகையிலே தொடர்பு படுகிறது என்பதையும் ஊடக துறையினுடைய வளர்ச்சிக்கு சட்டம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் சட்டத்துறையினுடைய வளர்ச்சி ஊடகத்துறை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் மிக சுருக்கமாக இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்
ஊடக துறையையும் சட்டத் துறையையும் இணைக்கக்கூடிய பிரதானமான விடயம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரமே. தகவல் பெறும் உரிமை உள்ளடங்கலாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் சட்ட கட்டமைப்பின் கீழாக வழங்கப்பட வேண்டிய ஒன்று.
ஒரு நாட்டினுடைய சட்ட கட்டமைப்பு எந்த தன்மையில் அல்லது எவ்வாறான தன்மையில் சுந்திரத்தை கருத்து தெரிவிப்பதற்க்கான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது என்பது ஊடக துறையினுடைய இருப்பிற்க்கு அஸ்திவாரமாகக் இருக்க வேண்டும்
எங்களுடைய நாட்டினுடைய அரசியல் அமைப்பாக இருக்கட்டும் அல்லது சட்ட கட்டமைப்புக்களாக இருக்கட்டும் இதன் நிமித்தமாக அல்லது இதன் பாலாக ஊடகத்துறை சிறப்பாக சுதந்திரமாக செயற்படக்கூடிய தன்மையிலே கருத்து தெரிவிக்கின்றன சுதந்திரம் உத்தரவாத படுத்தப்பட்டிருக்கிறதா என்பது முதலாவது.
ஆகவே ஊடக துறை சுதந்திரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்து தெரிவிக்கும் சுந்திரத்தின் அடிப்படையில் மாத்திரம் தான் சாத்தியமாகும். இது ஊடகத்தையும் சட்டத்தையும் இணைக்க கூடிய மிக பிரதானமான ஒன்று.
அவ்வாறு தான் ஒரு நாட்டினுடைய ஜனநாயகம் என்பது அங்கே இருக்கக் கூடிய சாமானியரஸகளுடைய கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தின் தன்மையிலே தங்கியிருக்கிறது.
ஆகவே எங்களுடைய நாட்டிலே கருத்து தெரிவிக்கின்ற சுதந்திரம் அடிப்படை உரிமையாக உத்தரவாத படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அந்த அடிப்படை உரிமையை சாமானியர்கள் பயன்படுத்துவதற்க்கு, சாமானியர்கள் பெற்றுக் கொள்வதற்க்கு ஊடகம் ஆற்றக்கூடிய வகிபாகம் என்பது பிரதானமனது. ஊடகங்கள் ஊடாக மக்கள் தகவல்களை பெற்றுக் கொல்வது என்பது கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தின் மிக அத்திவரமான புள்ளியாக அமைந்திருக்கிறது.
ஊடகங்கள் ஊடாக தாங்கள் பெற்றுக்கொண்ட கருத்துக்களை பயன்படுத்தி தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பங்களையும் மக்கள் ஊடங்கள் ஊடக பெற்றுக்கொள்ளும் நிலை இருக்கிறது.இவ்வாறு தான் ஊடகங்களும் சட்டமும் இணைகிறது. இவ்வாறுதான் ஊடகங்களும் சட்டமும் தொடர்புபடுகிறது.
இதுவரை நான் பேசியது ஊடகத்திறக்கும் சட்டத்திற்கும் இடையேயான கோட்பாடு சார் நெருக்கம் அல்லது இயக்கம். சட்டத்தினால் வழங்கப் பட்டிருக்கின்ற அல்லது உத்தரவாதப்படுத்த ப்பட்டிருக்கின்ற கருத்து தெரிவிக்கின்ற சுதந்திரத்தினிடைய இயல்பு நிலை என்ன அல்லது சட்டம் அங்கீகரித்திருக்கின்ற கருத்து தெரிவிக்கின்ற சுந்திரந்திரத்தை ஊடகங்களால் இன்றைக்கு இயல்பாக சுதந்திரமாக பயன்படுத்த முடிகிறதா என்பது நடை முறை சார்ந்த விடயம்.
ஆகவே சட்டம் கோட்பாட்டு அடிப்படையிலே அல்லது எழுத்திலே கருத்து தெரிவிக்கின்ற சுதந்திரத்தை எவ்வளவு தூரம் வலியுறுத்துகிறது என்பதற்க்கு அப்பால் சட்டத்தினால் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற இந்த கருத்து தெரிவிக்கின்ற சுதந்திரம் நடைமுறையிலே அனுமதிக்கப்படக் கூடியதாக இருக்கிறதா என்பது நாங்கள் பார்க் வேண்டிய ஒரு விடயம்
இந்த இடத்திலே தான் சட்டங்கள் வெறுமனே எழுத்தினால் சொற்களால் இருப்பது மாத்திரம் அல்லாது அதை அனுமதிக்கப்படக் கூடயதாக மாற்றப்பட வேண்டிய நிலையும் இருக்கிறது.
ஆகவே ஊடகங்களுடைய சுதந்திரமான இருப்பு என்பது சட்டத்தினுடைய எழுத்தில் மாத்திரம் அல்ல. சட்டம் செயற்படுத்தப்படும் விதத்திலும் தங்கியிருக்கிறது.
சட்டத்தினால் வலியுறுத்தப் பட்டிருக்கின்ற சுதந்திரத்தை கருத்து தெரிவிக்கின்ற சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்து செயற்படக் கூடிய முழுமையிலே இன்றைக்கு எங்களுடைய ஊடகங்கள் இருக்கிறதா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்
ஆகவே சட்டத்தினுடைய செயற்பாடு அது நடைமுறை படுத்தப்படுகின்ற விதம் ஊடகங்ளின் சுதந்திரமன இருப்பிற்க்கு மிக மிக அவசியமானது என்பதை நாங்கள
விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையிலே ஊடகங்களுடைய உரிமைகள் பற்றி பேசுகின்ற அதே நேரம் ஊடகங்களுடைய கடமைகள் பொறுப்புக்கள் பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டுய தேவை இருக்கிறது.
எந்தவொரு உரிமையும் பரிபூரணமானது கிடையாது.
உரிமைகள் ஒவ்வொன்றிலும் ஆழமான மட்டுப்பாடு விதிக்கப்படலாம், விதிக்கப்பட கூடும், விதிக்கப்பட முடியும். அவ்வாறு விதிக்கப்படுவதுதான் சட்டத்தினுடைய இயல்பான தன்மையும் கூட, ஊடகவியளர்களுக்கும், ஊடகங்ளுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கின்ற உரிமை இருக்கின்றாதே வேளை அந்த உரிமையை அவர்கள் பொறுப்புணர்வோடு பயன்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது.
வன்முறைகளை அறிக்கையிடுகின்ற போது அதிகமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற வரலாறுகளையும் நாங்கள பார்த்திருக்கிறோம். உரிமை மீறல்களை ஊடகங்கள் பதிவு செய்கின்றபோது மற்றுமொரு உரிமை மீறலுக்கு வழி வகுத்த விதமாக அந்த செய்திகள் பதிவேற்றபட்டதையும் காணக் கூடியதாக இருந்தது.
ஆகவே சட்டத்தினால் உரிமைகளை ஊடகங்கள் அனுபவிக்கின்றனர் அதே நேரம் அந்த உரிமையை மிக பொறுப்புணர்வோடு செயற்படுத்த வேண்டிய தேவையும் ஊடகங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு தான் சட்டமும் ஊடகமும் தொடர்பு படுகிறது.
இந்த செய்தியை இந்த அவையிலே கூடியிருப்பவர்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
ஆகவே ஊடகங்களினுடைய சுதந்திரமான இருப்பிற்க்கு சட்டம் உதவி செய்கின்ற அதே நேரம் மக்களினுடைய உரிமைகளை பாதுகாத்தல் என்கின்ற சட்டத்தினுடைய அடிப்படை நோக்கத்திறக்கு உதவி செய்வதோடு மக்களுக்கு நியாயத்தையும் நீதியையும் பெற்றுக் கொள்ள வழி செய்கிற வகையிலே ஊடகங்கள் பொறுப்போடு செயல்பட வேண்டிய தேவையும் இருக்கிறது.
அதனால்தான் இன்றைக்கு நாங்கள் கருத்து தெரிவிக்கின்ற சுதந்திரம் என்று பொதுவாக சொல்வதற்க்கு மேலதிகமாக ஊடகங்களுடைய கருத்து சுதநததிரத்திற்க்கு உட்படாத விசேடமான சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவைப்பாடுகள் பற்றியும் பேசினோம்.
ஆகவே சட்டங்களினுடைய உரிமைகள் சட்டங்கள் வயிலாக கிடைக்கக் கூடிய உரிமைகளை
ஊடகங்கள் ஏழுத்தில் மாத்திரமல்ல, நடைமுறையிலும் அனுபவிக்கும் அதே நேரம் ஊடகங்கள் தங்களுடைய சமூக பொறுப்புக்களை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டிய தேவையும் இருக்கிறது.