மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் காணி ஒன்றில் 375 குடும்பங்கள் குடியேறி குடியிருந்துவரும் குறித்த காணி தனது என காணி மாபியா குழு ஒன்று சொந்தம் கொண்டாhடி பொலிசாரின் அனுசரணையுடன் அத்துமீறி பைக்கோ வாகனம் கொண்டு உள்நுழைந்து குடிசைகளை உடைத்து குடிசைகளுக்கு தீயிட்டு அட்டகாசம் செய்துவருதாக பொலிசாருக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை (08) பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தினை முற்றுகையிட்டு முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிதோணா என்ற பிரதேசத்திலுள்ள அரச காணியில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த காணி இல்லாத வறிய மக்கள் கடந்த 4 வருடத்திற்கு முன்னர் காடுகளை துப்பரவு செய்து ஒருவருக்கு 10 பேச் என்ற அடிப்படையில் 375 குடும்பங்கள் குடிசையடைத்து குறியேறி பயிர் செய்கை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் உட்பட 4 பேர் கொண்ட காணி மாபிய குழுவினர் கடந்த மாதம் குறித்த காணிக்குள் உள்நுழைந்து தங்களது காணி எனவும் எல்லோரும் காணியில் இருந்து வெளியேறவேண்டும் என அச்சுறுத்தியதையடுத்து பொலிசாரிடம் முறைப்பாட்டடையடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணி மாபியா குழுவினர் அங்கு சென்று குடியிருப்பாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபடுவதும் வேலிகளை உடைப்பதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவுரும் நிலையில் அவர்களுக்காக குரல்கொடுத்துவந்த ஒருவருக்கு பொலிசார் கஞ்சாவை வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும் காணி மாபியாக்கள் பொலிசாருடன் சேர்ந்து குடியிருப்புக்குள் பெக்கோ வாகனம் கொண்டு வேலிகள் குடிசைகளை உடைத்துள்ளதாகவும் சில குடிசைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகவும் குடிசை ஒன்றை பொலிசார் பிடுங்கி எடுத்துக் கொண்டு அந்த குடிசையமைத்த பெண்கை கைது செய்து கொண்டு சென்று போன்ற பல்வேறு அநீதிகளை காணி மாபியா குழுவுடன் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறு நீதியை கடைபிடிக்க வேண்டிய பொலிசார் காணிமாபியா குழுவிடம் சந்திவெளி பொலிசார் பணத்தை பெற்று அநீதியாக ஒருபக்க சார்பாக இந்த எழை வறிய மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த பொலிஸ் நிலைய பொலிசாரின் அடாவடிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தினை முற்றுகையிட்டு சந்திவெளி பொலிசாரினால் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடாவடித்தனம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்தனா.
இனையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பு கொண்டு நீதியாக செயற்படுமாறு அத்துமீறி குடிசைகளை எரித்த காணி மாபியா குழுவினரை கைது செய்யுமாறு கட்டளையிட்டதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறினர்.