வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அண்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.