
இந்திரவிழா வரலாற்றில் மட்டுமல்ல, இலங்கையிலே இதுவரையில் எந்தவொரு மின்னமைப்பினாலும் கட்டமைக்கப்படாத, இந்து தெய்வங்களின் உருவங்களை மிகவும் பிரமாண்டமாக மின்னலங்காரங்களால் கட்டமைத்து வரலாற்றுச்சாதனை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை இந்திரவிழாவில் இது இடம்பெற்றது.
இந்திரவிழாவிலே அனைத்து மக்களையும் கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இந்திரவிழாவை புதியதொரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற பெருமை ஆதிவைரவர் மின்னமைப்பையே சாரும்.
2023 ஆண்டில் இந்திரவிழாவில் ஆஞ்சநேயர்
70 அடி உயரம்,மாயவர் ,28 அடி உயரம்,46 அடி அகலம்
ஸ்ரீ முத்துமாரியம்மன் 50 அடி உயரம், கிருஷ்ணர் ராதை
34 அடி உயரம் காணப்பட்டு பக்தர்களின் மனதினை கொள்ளையடித்துள்ளன.







