
சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலையின் தாதியர்கள் மகிழ்வுடன் கொண்டாடினர். இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச தாதியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, தாதிய சேவையில் ஈடுபட்டு மறைந்த தாதியர்கள் நினைவுகூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

