தலைமன்னாரில் 3 பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று 11.05.2023 பிற்பகல் 3.30 மணியளவில், வீதியால் சென்ற மூன்று பெண் பிள்ளைகளை வீதியில் சென்ற வாகனத்தில் பயணித்த இருவர் கடத்துவதற்கு முற்பட்டுள்ளதாக தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஊருக்கு பொருட்கள் விற்பனைக்காக வரும் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் தலைமன்னார் பெலிசார் கைது செய்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற பின்னரும் அவர்கள் அந்த ஊரில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.
அவர்களிடம் மேலும் மேற்கொண்ட விசாரணையின்போது, தாங்கள் கடைகளுக்கான பொருட்கள் விற்பனைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த ஊருக்கு வருவதாக தெரிவித்தனர்.
அதன்பின்னர் அவர்கள் இருவரும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.