யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – திருநெறிக் கழகத்தினருக்கு கிராமப்புற அறநெறிப் பாடசாலைகளை வலுவூட்டுவதற்காக ரூபா 100,000. பணமும்,
யாழ்ப்பாணம் கல்லுண்டாய், நவாலி கிழக்கை சேர்ந்த மாணவிக்கு ரூபா 45,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டியும், வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிக்காக ரூபா 10,000 பணமும்,
திருகோணமலை – செல்வநாயகபுரம், உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக 5ம் கட்டமாக பணமாக ரூபா 100,000மும், வழங்கப்பட்டது.
கொம்மந்தறை – யா/ கம்பர்மலை வித்தியாலயத்திற்கு ரூபா 295000 பெறுமதியான குடி நீர் சுத்திகரிப்பு
இயந்திரம் பொருத்தப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக நேற்று முன்தினம் பாடசாலை சமுகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வாராந்த ஆச்சிரம நிகழ்வாக செல்விகள் சாருமதி வேல்மாறன், சாரங்கி வேல்மாறன் ஆகியோர்களின் பண்ணிசையும் இடம் பெற்றது.
மேற்படி செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், நிர்வாகிகள் வழங்கிவைத்தனர்